சபைக்கு காரணமாகி அங்கம் வகித்த முன்னோர்கள் மற்றும் அவர்களின் சிறப்புக்கள். ஒவ்வொரு தலைமுறையும் ஜோதிட, வாஸ்து, வேள்வி மரபை வளர்த்து அடுத்த தலைமுறைக்கு அளித்தனர்.The ancestors who shaped and served this Sabha, and their distinctions. Each generation nurtured the tradition of astrology, vasthu and yagna, and handed it to the next.
அன்றைய தேவாரம் நாயக்கர் ஜமீனில் கி.பி.CE 1750-ல் திவானாகவும், ஜோதிட வாஸ்து பிரசன்ன ஆசானாகவும் பணியாற்றி நிறைய ஜோதிட பிரசன்ன குறிப்புகளை எங்கள் தலைமுறைக்கு தந்த மகான். முன்னோர்களின் தொழிலை மூத்த மகன் தொடர வேண்டும் என்கிற முறையை போதித்தவர்; இச்சபையை துவங்கியவர்.A great soul who served as Diwan of the Thevaram Nayakkar estate around 1750 CE and as a master of astrology, vasthu and prasanna, passing many astrological and prasanna notes to our lineage. He taught that the eldest son should continue the ancestral vocation, and founded this Sabha.
அட்ட கர்மத்தில் ஆகர்ஷண வசிய கலை பயின்று கோவில்களுக்கும், வேண்டும் மக்களுக்கும் எந்திரங்கள் செய்து தந்தவர். இவரின் எந்திர பிரதிஷ்டை பூஜை முறையை விவரித்து 'சக்ர ஆகர்ஷனா' எனும் 17 செய்யுள் தந்து வழிகாட்டியவர்.Learned the art of akarshana–vasiya among the eight karmas and crafted yantras for temples and for those in need. He documented his yantra-consecration puja method in a 17-verse work, 'Chakra Akarshana'.
ஜோதிட பாடலாக கரும்பாம்பின் நிலையறியும் முறைக்கு 100 பாடலாக 'கரும்பாம்பு சதகம்' செய்தார். அதுவே இன்றளவும் ராகுவின் நிலையை ஜோதிடத்தில் சொல்ல எங்கள் தலைமுறைக்கு உதவுகிறது.Composed 'Karumpaambu Sadhagam', a 100-verse poem for reading the state of the black serpent (Rahu). It still helps our lineage read Rahu's position in astrology today.
வாஸ்துவிற்காக அதிக விசயங்களை தந்தவர். அவரது குறிப்பு நூலில் அரண்மனை, பெருங்கோவில்கள் அமைக்க கையாளப்பட்ட வாஸ்து நுணுக்கங்களும், ஆயப் பொருத்த முறையின் சூட்சமங்களும் இருந்தன.Gave much to the science of vasthu. His notebooks held the vasthu subtleties used to build palaces and great temples, and the secrets of the aaya-porutham method.
மாந்தியின் போக்கிலே ஜோதிடம் நகரும் முறையை சொல்லும் விதமாக 'மாந்திசெப்பும் மாயம்' என்ற 11 நேரிசை வெண்பாவில் செய்யுள் வடிவில் பதிகம் தந்தார்.Gave an 11-verse neerisai-venba poem, 'Maandhi Seppum Maayam', explaining how astrology moves along the course of Maandhi (Gulika).
வடலூர் ராமலிங்க அடிகளாரின் தீவிர பக்தர்; சிறந்த ஜோதிடர்.A devoted follower of Vadalur Ramalinga Adigal; an excellent astrologer.
சுருளி மலை முருக பக்தர்; ஜோதிடர்; ஜால தந்திரம் கற்று தேர்ந்தவர்.A devotee of Suruli Malai Murugan; astrologer; accomplished in jaala-thanthra.
பெருமாள் கோவிலில் தலைமை அர்ச்சகராகவும், வேள்வி பூஜைகளை செய்த புரோகிதராகவும் பணியாற்றி, இறுதியில் இறைதுறவறம் சென்றவர்.Served as head priest at a Perumal temple and as the purohit who performed yagna pujas; in the end he took to renunciation.
வேள்வி பூஜைகளை செய்த புரோகிதராக, ஊர் காமாட்சி அம்மன் கோவிலில் தலைமை அர்ச்சகராக, பிரசன்ன ஜோதிடராக, அளப்பரிய சம்ஸ்கிருத–தமிழ் பண்டிதராக நிறைய குறிப்புகளை தந்தவர். தன் மரணம் அறிந்து பகவத் கீதையை படித்தவாறே மரணம் எய்தியவர்; அணைப்பட்டியில் திருஅடக்கம் செய்யப்பட்டார்.As a purohit performing yagna pujas, head priest at the village Kamatchi Amman temple, prasanna astrologer, and a peerless Sanskrit–Tamil scholar, he left many notes. Knowing his own death, he passed away reciting the Bhagavad Gita; he was interred at Anaipatti.
வாஸ்து நிபுணர்; வடலூர் ராமலிங்க அடிகளாரின் தீவிர பக்தர். நிறைய தல யாத்திரை மேற்கொண்டு இறைவன் மேல் பாக்களை தந்த அருளாளர். வேதாத்திரி காட்டிய நெறிகளையும், சன்மார்க்க நெறிகளையும் கடைபிடித்தவர்.A vasthu expert and devoted follower of Vadalur Ramalinga Adigal. He undertook many pilgrimages and offered verses to the Lord, following the paths shown by Vethathiri and the Sanmarga tradition.
பிரசன்ன ஜோதிடர், எண்கணித நிபுணர், வாஸ்து பூஜாவித்தகர், வேள்வி அமைப்பாளர். சுருளிமலை முருகன் மேல் நூல் செய்து அதை திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளால் வெளியிட்டவர். 'விதியை வெல்லும் பூஜா முறை' எனும் நூலை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்க சுவாமிகள் முன்னிலையில் வெளியிட்டவர். புகழ்பெற்ற ஆன்மிக இதழில் குரு பெயர்ச்சி மற்றும் மாத ராசி பலன்கள் எழுதி வந்தவர். கோவையில் பழமைவாய்ந்த அம்மன் ஆலயத்தில் தலைமை அர்ச்சகராக பணியாற்றி, தனது நல்ஒளி ஞான சபாவை அரசிடம் முறையாக பதிவு செய்தவர்.Prasanna astrologer, numerology expert, master of vasthu puja and organiser of yagnas. He authored a work on Suruli Malai Murugan, released by Thirumuruga Kirupananda Variyar Swamigal, and released 'Vithiyai Vellum Puja Murai' in the presence of Kamakoti Aadheenam Sivalinga Swamigal. He wrote Guru-transit and monthly rasi predictions in a renowned spiritual magazine, served as head priest at an ancient Amman temple in Coimbatore, and formally registered the Naloli Gnana Sabha with the government.
அவரது முன்னோர்கள் காட்டிய பணியே பாணியாக தொடர்கிறார். தந்தையின் அரிய முயற்சிகளுக்காக நிறைய பணிகளை முன்னெடுக்கிறார். மாந்திரீக, ஜோதிட ஆற்றல் நிரம்பப் பெற்றவர்; உள்ளுணர்வின் மூலம் பிரசன்ன முறையில் பலன் சொல்வதில் வல்லவர்; தமிழில் திறம்பட வெண்பாக்கள் எழுதுவதில் வல்லவர். இன்று நல்ஒளி (NALOLI) YouTube சேனல் வழியாகவும், இலவச நேரலை வழியாகவும் அனைவருக்கும் ஆன்மிக ஜோதிட சேவை செய்துவருகிறார்.He continues the very work his ancestors modelled. For his father's rare endeavours he takes forward many initiatives. Rich in maantric and astrological power, skilled at giving predictions intuitively through the prasanna method, and adept at composing venba verses in Tamil. Today he serves everyone through the Naloli (NALOLI) YouTube channel and free live broadcasts with spiritual astrology guidance.
இச்சபை 1750-ல் துவங்கப்பட்டது. மக்கள் சேவையே மகத்தானது என்ற கோட்பாட்டின்படி, ஜோதிடம், வேள்வி, வாஸ்து, யோக கலைகளை உலகெங்கும் பரப்புவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டுவருகிறது. பின்னாளில் பிரம்மஶ்ரீ சங்கர கணபதி ராஜ ஆச்சார்யா அவர்களால் அரசிடம் பதிவு செய்யப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது.This Sabha was founded in 1750. Guided by the belief that service to people is the greatest of all, it works to spread the arts of astrology, yagna, vasthu and yoga across the world. It was later formally registered with the government by Brahmasri Sankara Ganapathi Raja Acharya and continues to flourish.
தமிழ் மண்ணில் சிறந்த ஆன்மிக இதழில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி மாத பலன்களை எழுதிவந்த நல்ஒளி ஞான ஜோதிட மற்றும் வேள்வி ஆராய்ச்சி மையம் — இன்று அவரது மகன் அருள் கணபதி ஆச்சார்யா அவர்களால் தொடர்கிறது.The Naloli Gnana Astrology and Yagna Research Centre — which wrote Guru-transit and Sani-transit monthly predictions in a leading spiritual magazine of the Tamil land — is today continued by his son, Arul Ganapathi Acharya.
உங்கள் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும், பிரச்சனைகளுக்கும், கவலைகளுக்கும் இந்த ஜோதிடத்தின் மூலமும், அந்த ஜோதிடத்தை எழுதிய ரிஷிகள் மூலமும், ரிஷிகளை உருவாக்கிய இறைவன் மூலமும், இறைவனின் ஆணையை ஏற்று பலன் தரும் கிரகங்களின் வழிபாடு மூலமும் தீர்வு உண்டு என்பதை நம்புபவன். பாரதம் பாடிய வியாசரே நவகிரகங்களுக்கு துதி எழுதி தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.We believe there is a remedy for the problems and worries you meet each day in life — through this astrology, through the rishis who wrote it, through the Lord who created the rishis, and through the worship of the planets that grant their fruits by the Lord's command. It is notable that Vyasa, who sang the Mahabharata, began by writing a hymn to the nine planets.
"ஒரு ஜாதகத்திற்கு ஒரு மணி நேரம் போதாது — ஜோதிடம் என்பது பல நுணுக்கங்கள் கொண்டு பார்க்க வேண்டிய கலை. உங்கள் ஜாதகம் முழுமையாக பார்த்தால் தான் தெளிவான வாழ்க்கைக்கு வழி சொல்ல இயலும்.""One hour is not enough for a single horoscope — astrology is an art that must be read through many subtleties. Only when your horoscope is examined in full can a clear path for life be shown."
எந்த ஒரு கேள்விக்கும் அவசரப்பட்டு பதில் தந்தால் அதன் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகும். இந்த சாத்திரத்தை மேலோட்டமாக படித்து சொன்னால் சிறப்பாக பலன் சொல்ல முடியாது; ஊன்றி ஆராய வேண்டும். "நானும் ஜோதிடம் பார்க்கிறேன்" என்று கூறிக்கொண்டு உங்கள் கர்ம பதிவுகளோடு விளையாடும் போலி அல்ல — விளையாடும் அனைவர்க்கும் நம் சுய கர்மாவிடம் பதில் சொல்லி ஆக வேண்டும் என்று பயப்படுகிற சாதாரண மனிதன்; கடவுளுக்கும் கர்மாவுக்கும் பயப்படுகிறவன்.If any question is answered in haste, its truth becomes doubtful. This science cannot yield good results when read superficially; it must be studied deeply. He is not a pretender who plays with your karmic records claiming "I too read astrology" — he is an ordinary man who fears that everyone who toys with it must one day answer to their own karma; one who fears both God and karma.
மனிதன் தன்னை காத்து கொள்ள ஜோதிடம் ரிஷிகளால் படைக்கப்பட்ட கால கண்ணாடி. புது உலகு செய்ய கோர்க்கன் துடித்தான், ஆனால் கிரகங்கள் விடவில்லை; எல்லோருக்கும் நன்மை செய்ய பிறந்த கர்ணனால் உலகை ஆள முடியவில்லை; நலம் பல பெற பிறந்த நளனும், பொய்யுரையா அரிச்சந்திரனும் கிரகங்கள் பிடியில் சிக்குண்டார்கள். இறையின் பிறப்பு நியதியில் கூட கிரக பலம் அவசியம் என்பதை ஸ்ரீராம பிரானையும், ஸ்ரீ கண்ணபிரானையும் போற்றும் நூல்களில் கண்டிருக்கிறோம்.Astrology is a mirror of time, created by the rishis for man to guard himself. Kaurava strove to make a new world, but the planets did not yield; Karna, born to do good to all, could not rule the world; Nala, born for much good, and the truthful Harishchandra were both caught in the grip of the planets. That the strength of the planets matters even in the divine order of birth, we have seen in the works that praise Sri Rama and Sri Krishna.
தேவாரங்களிலும், திருவாசகத்திலும் மக்கள் கிரகங்களின் மேலும் நட்சத்திர பலங்களின் மேலும் கொண்ட மன பயத்தை போக்க அங்கங்கே உவமைகள் கையாளப்பட்டன. "ஒன்பதோடு ஒன்றோடேழு பதினெட்டோடாறும் உடன் ஆய நாள்கள் அவை தாம்" என்று 27 நட்சத்திரங்களை கோளறு பதிகத்தில் ஞானசம்பந்தர் குறிப்பிடுவதும்; சுந்தரர் திருவொற்றியூர் பதிகத்தில் கோச்சார சனியின் நிலையை பாடுவதும்; மணிவாசகரும் ஒரு பதிகத்தில் கோச்சார சனியின் நிலைப்பாட்டை பதிவு செய்வதும் — கிரகங்களும் நட்சத்திர இயக்கங்களும் மனித வாழ்விலே எந்த அளவுக்கு மாற்றத்தை செய்திருந்தது என்பதை ஞானிகளே பதிவு செய்துள்ளமையை கால கண்ணாடியில் பார்க்கிறோம்.In the Thevaram and the Thiruvasagam, similes were used here and there to ease the people's fear of the planets and the powers of the stars. Gnanasambandar refers to the 27 stars in the Kolaru Padhigam; Sundarar sings of the position of transiting Saturn in the Thiruvottriyur padhigam; and Manikkavasagar too records the standing of transiting Saturn in a padhigam — through the mirror of time we see that the sages themselves recorded how deeply the planets and the movements of the stars have shaped human life.
முன்னோர்களின் சூட்சம உண்மைகளையும் ராசி பலன்களையும் அருள் கணபதி ஆச்சார்யா அவர்களின் குரலில் கேளுங்கள். 2018 முதல் தொடரும் ஆன்மிக பயணம்.Hear the subtle truths of the ancestors and the rasi predictions in the voice of Arul Ganapathi Acharya. A spiritual journey continuing since 2018.
பாடங்களை பார்க்க ▶Watch the lessons ▶

இன்னும் நிறைய புகைப்படங்கள் விரைவில் பதிவேற்றப்படும்.More photographs will be uploaded soon.
ஒரு ஜாதகத்திற்கு ஒரு மணி நேரம் போதாது. வாழ்க்கையை காட்டும் இக்கணிதத்தை, ஞானத்தை நிரம்பச் சொல்ல வாய்ப்பு தாருங்கள். உங்கள் ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து தெளிவான வழிகாட்டுதல் தரப்படும்.One hour is not enough for a horoscope. Give the chance to convey in full this science and wisdom that reveal life. Your horoscope will be examined completely and clear guidance given.
முன்பதிவிற்கு மின்னஞ்சல் செய்யுங்கள்To book, please email us ·
Please email for an appointment
உங்கள் சுய ஜாதகத்தின் அடிப்படையில் எழுப்பப்படும் கேள்விக்கு அருள் கணபதி ஆச்சார்யா அவர்களே LIVE CHAT-ல் பதில் சொல்லும் இலவச நேரலை. முழுவதும் இலவசம் — அனைவரும் பயன்பெறலாம்.A free live broadcast where Arul Ganapathi Acharya himself answers, in LIVE CHAT, the question raised from your own horoscope. Completely free — everyone may benefit.
